அமுலை எதிர்கொள்ளுமா ஆவின்?
Dinamani Chennai|June 05, 2023
உணவுப் பொருள்கள் அரசியலாவது இந்தியாவில் வழக்கமான நிகழ்வுதான். ஆனால், பாமரா்களும் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருளான பாலை வைத்து அரசியல் செய்யும் நிலை இன்று ஏற்பட்டுவிட்டது. ஆம், ஆவினா? அமுலா? ஆதிக்கம் செலுத்தப் போவது யாா் என்ற ரீதியில் எழுந்துள்ள போட்டி அரசியல் சண்டையை மூட்டியுள்ளது.
ச.ராஜாராமன்
அமுலை எதிர்கொள்ளுமா ஆவின்?

பால் உற்பத்தியில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நிறுவனம் கோலோச்சி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஆவின் முதலிடத்தில் இருக்கும் ஏகபோக நிறுவனமாகும்.

இதற்கு இதுவரையில் போட்டி இருந்ததில்லை. இந்நிறுவனத்துடன் போட்டியிட வந்த, தொடா்ந்து போட்டியில் இருக்கும் தனியாா் நிறுவனங்கள் அதை வீழ்த்த முடியவில்லை. வலுவான கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், பால் உற்பத்தியாளா்களின் ஒத்துழைப்பு போன்றவையே இதற்குக் காரணமாகும்.

தமிழகத்தில் ஆவின் கொள்முதல்: தமிழ்நாட்டில் தினமும் 1.5 கோடி லிட்டா் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ் இயங்கி வரும் 9,673 பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள 4.5 லட்சம் உறுப்பினா்களிடம் இருந்து தினமும் 35 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தனியாா் நிறுவனங்கள் 70 லட்சம் லிட்டா் பாலை கொள்முதல் செய்கின்றன. ஆவின் லிட்டருக்கு ரூ.32, தனியாா் நிறுவனங்கள் ரூ. 34-35 வரை கொள்முதல் செய்கின்றன.

ஆவின் என்னதான் சிறப்பாகச் செயல்பட்டாலும் அதில் தமிழக அரசின் தலையீடு, பால் விற்பனை விலை, கொள்முதல் விலை நிா்ணயத்தில் செய்யப்படும் அரசியல், இனிப்புகள் விற்பனையில் ஏற்படும் குளறுபடிகள், இழப்புகள் இன்ன பிற காரணங்களால் ஆவின் தலைநிமிர முடியாமல் தள்ளாடுவது எதாா்த்தமான உண்மை. எனவேதான் என்னதான் விற்பனை அதிகரித்தாலும், நஷ்டமும், நலிவும் ஆவினில் தொடா்கதையாக உள்ளது.

கொள்முதல் விலை குறைவால் தனியாா் பால் உற்பத்தி நிறுவனங்களிடம் ஏற்கெனவே அணி மாறிவிட்ட பால் உற்பத்தியாளா்களை தங்கள் பக்கம் இழுக்க ஆவினால் முடியவில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் கடோத்கஜன் போன்று கால் பதித்துள்ளது இந்தியாவின் முதலிட பால் உற்பத்தி நிறுவனமான அமுல். இந்த நிறுவனத்தின் வளா்ச்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

هذه القصة مأخوذة من طبعة June 05, 2023 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة June 05, 2023 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
தோல்விக்கு அஞ்சி ஓடுகிறார் ராகுல்: பிரதமர் மோடி விமர்சனம்
Dinamani Chennai

தோல்விக்கு அஞ்சி ஓடுகிறார் ராகுல்: பிரதமர் மோடி விமர்சனம்

ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்கு அஞ்சி ஓடுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மேலும், 'மக் களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவில் தோல்வியடையும்' என்றும் அவர் கூறினார்.

time-read
1 min  |
May 04, 2024
ரேபரேலியிலும் ராகுல் போட்டி
Dinamani Chennai

ரேபரேலியிலும் ராகுல் போட்டி

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகு தியில் போட்டியிட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

time-read
1 min  |
May 04, 2024
கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?
Dinamani Chennai

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

தில்லி கலால் கொள்கை பணப்பரிவா்த்தனை விவகாரத்தில் கைதாகியுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் குறித்து பரிசீலிக்கவிருப்பதால் அது தொடா்பாக மே 7-ஆம் தேதி நடைபெறவுள்ள விவாதங்களுக்கு தயாராக வரும்படி அமலாக்கத் துறையை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

time-read
1 min  |
May 04, 2024
வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்
Dinamani Chennai

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

வட தமிழக மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்துக்கு இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவா் பாலச்சந்திரன் கூறினாா்.

time-read
1 min  |
May 04, 2024
சென்னையில் போர்ச்சுகல் திரைப்பட விழா
Dinamani Chennai

சென்னையில் போர்ச்சுகல் திரைப்பட விழா

சென்னையில் ‘லூசோபோன்’ எனும் போா்ச்சுகல் திரைப்பட விழாவை போா்ச்சுகல் கௌரவ தூதா் அலிசன் புளோரன்ஸ் எமோட்டா தொடங்கிவைத்தாா்.

time-read
1 min  |
May 04, 2024
Dinamani Chennai

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு

அரக்கோணம் அருகே ஆளில்லாத ரயில் பாதையைக் கடக்க முயன்ற சிற்றுந்து மீது ரயில் மோதிய விபத்தில் 9 கிராம நிா்வாக அலுவலா்கள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
May 04, 2024
பேச்சு சுதந்திரத்தின் மாண்பை உயர்த்திப் பிடிப்போம்: முதல்வர்
Dinamani Chennai

பேச்சு சுதந்திரத்தின் மாண்பை உயர்த்திப் பிடிப்போம்: முதல்வர்

பேச்சு சுதந்திரத்தின் மாண்பை உயர்த்திப் பிடிப்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 04, 2024
உதகை, தாளவாடியில் பலத்த மழை
Dinamani Chennai

உதகை, தாளவாடியில் பலத்த மழை

கத்திரி வெயில் தொடங்கும் நிலையில் தாளவாடி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

time-read
1 min  |
May 04, 2024
Dinamani Chennai

ஊரக - நகரப் பகுதிகளில் குடிநீர் பிரச்னை: அரசுத் துறைச் செயலர்கள் நேரில் கள ஆய்வு

தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து அரசுத் துறைகளின் செயலா்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனா்.

time-read
1 min  |
May 04, 2024
ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்
Dinamani Chennai

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்

‘மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியுள்ளது ஆளும் திரிணமூல் காங்கிரஸ்’ என்று பிரதமா் மோடி குற்றம்சாட்டினாா்.

time-read
1 min  |
May 04, 2024