புது தில்லி, ஆக. 8: மின் விநியோகத் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில் மின்சார சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா மக்களவையில் திங்கள் கிழமை அறிமுகம் செய்யப்பட் டது.
இந்த மசோதாவுக்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, விரிவான ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுக்கு அனுப்பப்பட்டது.
மின்சார விநியோகத் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க வகை செய்யும் மின் சார திருத்த மசோதாவை மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மக்களவையில் அறிமுகம் செய்தார். நுகர்வோர் தாங்கள் விரும்பும் சேவை வழங்குவோரைத் தேர்ந்தெடுக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.
இந்த மசோதா, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக உள்ளதாக காங்கிரஸ்,திமுக,திரிணமூல், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
மசோதாவை அறிமுகம் செய்வதற்கு முன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால், அதை அவைத் தலைவர் ஓம் பிர்லா நிராகரித்தார்.
பின்னர், காங்கிரஸ் எம்.பி.மணீஷ் திவாரி பேசுகையில், 'ஒரே பகுதியில் பல தனியார் நிறுவனங்கள் மின்சார வசதி வழங்குவதற்கு இந்த மசோதா வழிவகுக்கிறது. இது அந்த நிறுவனங்களுக்கு லாபத்தையும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு இழப்பையும் ஏற்படுத்தும். மின்சார விநியோகத்தில் மத்திய அரசின் பங்கை குறைக்கவும் வகை செய்யும்' என்றார்.
هذه القصة مأخوذة من طبعة August 09, 2022 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 09, 2022 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி பறித்துவிடுவார்
ராகுல் காந்தி
நீட் தேர்வு - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண்நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் 557 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற்றது.
இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன.
தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்
17 இடங்களில் சதமடித்தது வெயில்
இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு
அமைச்சரவை ஒப்புதல்
பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை
ஊக்கமருந்து பரிசோதனைக்காக மாதிரியை தர மறுத்ததற்காக இந்திய மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியாவுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (என்ஏடிஏ) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முதலிடத்துக்கு வந்தது கொல்கத்தா
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: கனடாவில் ‘சட்டத்தின் ஆட்சி’
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்
இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையைப் புறக்கணிக்க ஊழியர்களுக்கு உத்தரவு
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு காவல் துறை விடுக்கும் அழைப்பாணைகளை புறக்கணிக்குமாறு மேற்கு வங்க ஆளுநா் மாளிகை ஊழியா்களுக்கு ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளாா்.