75வது ஆண்டு சுதந்திர தின அமிர்த பெருவிழாவை முன்னிட்டு நீர்வள நிலவளத் திட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கான போட்டிகள்
இராமநாதபுரம், வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக கோவை, நீர் நுட்ப மையத்துடன் இணைந்து நீர்வள நிலவளத் திட்டம் கடந்த நான்கு வருடமாக நயினார் கோவில் வட்டார பகுதிகளில் TN SARN மரம் நடும் விழா செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெடுங்குறிச்சி, உடையார் குடியிருப்பு, R.S.மங்களம், பாண்டியூர், கார்குடி, மும்முடிச்சாத்தான், சின்னஅக்கிர மேசி, அரசடி வண்டல் பகுதிகளில் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர். மேலும் இத்திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருடமாக மும்முடிச்சாத்தான் கிராமம் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வேளாண் சார்ந்த தொழில் நுட்பங்கள் வழங்குதல், இடுபொருள்கள் வழங்குதல், செயல் விளக்கங்கள், வயல் விழாக்கள் மற்றும் கண்டுணர்வு சுற்றுலா மூலம் தொழில் நுட்ப பார்வையிடல் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.