Try GOLD - Free

Maalai Express - June 12, 2025

filled-star
Maalai Express

Maalai Express Description:

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

In this issue

June 12, 2025

தினமும் மாலையில் மாலை எக்ஸ்பிரஸ் படியுங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும் அனைத்து தரப்பு சென்றடைந்து பயனடைய வேண்டும் என அறிவுறுத்தியதன் அடிப்படையில், கிராமம் தோறும் மனுநீதி நாள் முகாம் உள்ளிட்ட பல்வேறு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அம்முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி வருகிறார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் ஏற்பு செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும், அரசுத்துறை அலுவலர்கள் அனைவரும் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் எடுத்துரைத்தார்கள். எனவே, பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள அனைத்து திட்டங்களையும் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.

1 mins

விழுப்புரத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கிக் கடனை ஆட்சியர் வழங்கினார்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில், காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழு தினவிழாவில், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு வங்கிக் கடன் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியதை தொடர்ந்து, விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி, செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா மற்றும் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு வங்கிக்கடன் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

1 mins

மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவிகளை ஆட்சியர் வழங்கினார்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் சென்னை கலைவாணர் அரங்கத்திலிருந்து மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கி கடன் இணைப்பு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினைத் துவக்கி வைத்ததைத் தொடர்ந்து தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. திருமராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனிநாடார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மருதிரு. சதன் திருமலைக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவிகளை ஆட்சியர் வழங்கினார்14

1 mins

மதுரை ஆரப்பாளையம் ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

மதுரை, ஜூன் 12மதுரை மாநகர் ஆரப்பாளையம் காளியம்மன் கோவில் தெரு வாய்க்கால் கரை தெரு ஞானஒளிவுபுரம் மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம் 4 கால யாகசாலை பூஜை விக்னேஸ்வர பூஜை நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கியது . யாகசாலை பூஜைகளை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தலைவர் பாலசுப்பிரமணியன் செயலாளர் இசக்கி (டோக்கு) பொருளாளர் கிருஷ்ணன் நிர்வாகிகள் முத்துசாமி சேகர் ஆகியோர் முன்னிலையில் கோபுர காசத்திற்கு புனித நீரானது ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மதுரை ஆரப்பாளையம் ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா22

1 mins

சேலம் விநாயகா மிஷன் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவர்கள் எலும்பு மாதிரிகளை கல்லூரிக்கு வழங்கினர்

விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியை சேர்ந்த மருத்துவ உதவியாளர் பிரிவு மாணவர்கள் கல்லூரிக்கு இடுப்பு எலும்பு மாதிரிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர் . மருத்துவ உதவியாளர் பிரிவு மாணவர்களின் மருத்துவப் பயிற்சி, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் மற்றும் உடற்கூறியல் சார்ந்த பயிற்சிக்கு பெரிதும் உதவும் வகையிலும் மாணவர்களின் மருத்துவம் சார்ந்த பயிற்சிகளுக்கான அடிப்படை திறனை மேம்படுத்தும் நோக்கிலும் இவ்வன்பளிப்பானது வழங்கப்பட்டுள்ளது.

சேலம் விநாயகா மிஷன் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவர்கள் எலும்பு மாதிரிகளை கல்லூரிக்கு வழங்கினர்24

1 mins

Recent Issues

Related Titles

Popular Categories