Sirukathai Thoguppu- All Issues
இன்றைய சூழலில் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் கொண்ட கூட்டுக் குடும்பங்கள் சாத்தியமில்லை. படிப்பு, வேலை என்று ஆண்களும் பெண்களும் எங்கோ வாழவேண்டியிருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சிறிய பிரச்னையைக்கூடச் சமாளிக்கத் தெரியாமல் திண்டாட நேர்கிறது, அப்படிப்பட்டவர்களுக்குக் கை கொடுக்கிறது இந்தப் புத்தகம். சமையல், சமையல் அறை, வீட்டு வைத்தியம், குழந்தை வளர்ப்பு, ஆன்மிகம், தோட்டம், பண்டிகைகள் என்று பல தலைப்புகளில், ‘ஆஹா 50!’ என்ற பெயரில் மங்கையர் மலரில் வெளிவந்த வாசகர்களின் குறிப்புகள், இப்போது புத்தக வடிவில்.