சுதந்திர தினம் : இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15; பாகிஸ்தானுக்கு ஆகஸ்ட் 14. என்ன காரணம் - எஸ். சந்திரமௌலி
இந்திய சுதந்திர சட்டத்தின்படி, பிரிட்டிஷ் அரசாங்கம் 1947ஆம் வருடம் ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவில் அதாவது, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவை, இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரித்து சுதந்திரம் அளித்தனர். அந்த சட்டத்திலேயே "இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் வழங்கப்படுகிறது" என்றுதான் குறிப்பிடப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்தியா தனது சுதந்திர தினத்தை ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடி வருகிறது. ஆனால், இந்தியாவுடன் சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14ஆம் தேதியே கொண்டாடுகிறது. ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்ற நாடுகள், இப்படி அடுத்தடுத்த நாட்களில் சுதந்திர தினத்தை ஏன் கொண்டாடு கின்றன? வாருங்கள் சற்றே சரித்திரத்தைத் திரும்பிப்பார்க்கலாம்.