Dinamani Villupuram - April 24, 2025Add to Favorites

Dinamani Villupuram - April 24, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Villupuram

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Villupuram

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 24, 2025

தங்கம் பவுனுக்கு ரூ. 2,200 சரிவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.72,120-க்கு விற்பனையானது.

1 min

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

10 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104 டிகிரி

தமிழகத்தில் புதன்கிழமை வேலூர், பரமத்திவேலூர் உள்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது.

1 min

இந்தியா-பாகிஸ்தான் எல்லை மூடல்

தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; மத்திய அரசு அதிரடி முடிவு

1 min

துணைவேந்தர்கள் மாநாடு: அரசுடன் மோதல் இல்லை

துணைவேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் தமிழக அரசுடன் மோதல் போக்கு இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

1 min

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விக்கிரவாண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

1 min

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், உயிரிழந்தோருக்கு செஞ்சியில் அகில இந்திய இந்து மக்கள் கட்சி சார்பில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது (படம்).

1 min

புயலால் பாதித்த பள்ளிகளின் கற்றல் திறன் மேம்பாட்டுக்கு உதவி

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெயநல்லூர் ஒன்றியத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இரு அரசுப் பள்ளிகளின் கற்றல்திறன் மேம்பாட்டுக்கு குவால்காம் இந்தியா நிறுவனம் உதவியது.

1 min

இளைஞர் கொலை வழக்கில் நால்வருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பணத் தகராறில் இளைஞர் கொலையுண்ட வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

கல்லைத் தமிழ்ச் சங்க நிறுவனர் செ.வரதராசனார் நூற்றாண்டு நிறைவு விழா

கல்லைத் தமிழ்ச் சங்க நிறுவனர் புலவர் செ.வரதராசனாரின் நூற்றாண்டு நிறைவு விழா கள்ளக்குறிச்சியில் அண்மையில் நடைபெற்றது.

1 min

அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கக் கோரி திருக்கோவிலூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் க.பொன்முடியை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் பாஜக சார்பில் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

கள்ளக்குறிச்சியில் டாம்கோ கடன் திட்ட கலந்தாய்வுக் கூட்டம்

தமிழ்நாடு சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) கடன் திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் அதன் தலைவர் சி.பெர்னாண்டஸ் ரத்தின ராஜா தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

கள்ளக்குறிச்சியில் நாளை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வரும் ஏப். 25-இல் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

1 min

கலைஞர் கனவு இல்லம் திட்ட வீடுகள் கட்டும் பணிகள் தொடக்கம்

செஞ்சி ஒன்றியம் நரசிங்கராயன் பேட்டை ஊராட்சி எம்ஜிஆர் நகர் பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

1 min

அரசின் சேவைகள் மக்களை சென்றடைய ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

அரசின் சேவைகள் பொதுமக்களிடம் முழுமையாகச் சென்று சேருவதை உறுதிசெய்யும் வகையில், அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினார்.

1 min

ரூ.3 ஆயிரம் லஞ்சம்: நில அளவையர், கிராம உதவியாளர் கைது

விழுப்புரம் அருகே மனைப் பட்டா மாற்றத்துக்கு நில அளவை செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, நில அளவையர், கிராம உதவியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min

நல்லான்பிள்ளை பெற்றாள் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்

நல்லான்பிள்ளை பெற்றாள் ஊராட்சியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

1 min

14 இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

பெண்கள் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் க.பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்டத்தில் 14 இடங்களில் அதிமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

மேம்பாலம் அமைக்கக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்

விழுப்புரம் மாவட்டம், அரசூர் பாரதி நகர் பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அரசூர் கூட்டு சாலையில் கிராம மக்கள், பொது நல அமைப்பினர்கள் புதன்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

1 min

அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்து: செங்கோட்டையன் புறக்கணிப்பு

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி எம்எல்ஏ-க்களுக்கு புதன் கிழமை இரவு விருந்து அளிக்கப்பட்டது.

1 min

உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்

உலகத்தையே புத்தகமாகப் படிப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min

புதுவை ஆளுநர் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுவை ஆளுநர் மாளிகைக்கு இரண்டாவது முறையாக புதன்கிழமை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

1 min

பைக் மோதியதில் குழந்தை உள்பட 4 பேர் காயம்

கள்ளக்குறிச்சி அருகே சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குழந்தை உள்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

1 min

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-இல் மீண்டும் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை நிறைவு பெற்று ஜூன் 2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

1 min

போலீஸாருக்கு வார விடுமுறை அளிப்பு உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை

தமிழகத்தில் அரசாணையின்படி போலீஸாருக்கு வார விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தரப்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

1 min

பள்ளத்தில் தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு

திண்டிவனத்தில் 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பெயிண்டர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.

1 min

மருதமலையில் உலகின் மிகப் பெரிய முருகன் சிலை: தருமபுரம் ஆதீனம் வரவேற்பு

மருதமலையில் உலகின் மிகப் பெரிய முருகன் சிலை அமையவுள்ளதை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வரவேற்றுள்ளார்.

1 min

யுபிஎஸ்சி தேர்வில் 617- ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்

யுபிஎஸ்சி தேர்வில் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் இந்திய அளவில் 617-ஆவது இடம் பிடித்துள்ளார்.

1 min

கணினிப் பொறியாளரிடம் ரூ.8.66 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே கணினிப் பொறியாளரிடம் நூதன முறையில் ரூ.8.66 லட்சத்தை மோசடி செய்த அடையாளம் தெரியாத நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

முகூர்த்தம்- வார விடுமுறை: 1,170 சிறப்புப் பேருந்துகள்

முகூர்த்தம்- வார விடுமுறை தினங்களை முன்னிட்டு, தமிழகத்தில் பயணிகளின் வசதிக்காக 1,170 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

1 min

மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்

மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

1 min

தனியார் பால் விலையை நிர்ணயிக்க தனிக் கொள்கையா?

தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது.

1 min

போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு எப்போது?

போக்குவரத்துப் பணியாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்போது நடத்தப்படும் என்பதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்தார்.

1 min

பதிவுத் துறை - வணிக வரிகள் மூலம் 4 ஆண்டுகளில் ரூ. 5.80 லட்சம் கோடி வருவாய்

தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு, வணிக வரித்துறைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5.80 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

1 min

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல

டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

அவமதிப்பு பேச்சு: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை விசாரிக்க பதிவுத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிமன்ற பதிவுத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து

வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி சொத்து சேர்த்த வழக்கில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

1 min

மறு தீர்ப்புக்குரிய ஒரு தீர்ப்பு

ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது மட்டுமல்ல, குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது வியப்பு; உச்சநீதிமன்றமே அந்த மசோதாக்களை சட்டமாக்கியும் விட்டதுதான் அதனினும் வியப்பு.

1 min

'நான் முதல்வன்' திட்டத்தால் குடிமைப் பணி தேர்வில் தமிழர்கள் அதிகம் தேர்ச்சி

துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

1 min

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம்?

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது.

2 mins

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்: கேரள அரசு மெத்தனம்

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தின் கீழ் நீர் எடுக்கும் விஷயத்தில், கேரள அரசு மெத்தனமாக இருப்பதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார்.

1 min

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே. சேகர்பாபு ஆகியோர் உறுதியளித்தனர்.

1 min

பயங்கரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று காஷ்மீர் சம்பவத்தைச் சுட்டிக் காட்டி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும்

தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

1 min

அமெரிக்காவிலிருந்து திரும்பும் ராகுல் காந்தி: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அக்கட்சியின் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்க பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்து, இந்தியா திரும்புகிறார்.

1 min

குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி ஒத்திவைப்பு; பிரதமரின் பயணம் ரத்து

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக குடியரசுத் தலைவரின் அஸ்ஸாம் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

1 min

பயங்கரவாதிகள் தப்ப முடியாது

மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி

1 min

பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு

கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறை

1 min

எலான் மஸ்க் அறக்கட்டளை நிதியளித்த போட்டி: இந்திய நிறுவனத்துக்கு ரூ.426 கோடி பரிசு

தொழிலதிபர் எலான் மஸ்கின் அறக்கட்டளை நிதியளித்த போட்டியில், இந்திய நிறுவனத்துக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.426 கோடி) பரிசு வழங்கப்பட்டது.

1 min

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: விமான கட்டணம் உயர்த்தக் கூடாது என உத்தரவு

காஷ்மீர் மாநிலம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை முன்னிட்டு ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானக் கட்டணங்கள் உயர்த்தப்படாமல் இருக்க மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min

உலகளாவிய எண்ணெய் சந்தை ஸ்திரத்தன்மைக்கு சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்படுவோம்

கூட்டறிக்கையில் இந்தியா தகவல்

1 min

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத் துறை தோல்வியே காரணம்

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.

1 min

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுடனான மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் மோதவுள்ள இலங்கை மகளிர் அணி 17 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

லா லிகா கால்பந்து: மல்லோர்காவை வீழ்த்தியது பார்சிலோனா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா 1-0 கோல் கணக்கில் மல்லோர்காவை புதன்கிழமை வென்றது.

1 min

இந்தியா மீட்டில் கோனெரு ஹம்பி வெற்றி

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ 2024-25 செஸ் போட்டியின், இந்தியா மீட்டில் இந்தியாவின் கோனெரு ஹம்பி புதன்கிழமை வெற்றி பெற்றார்.

1 min

2-ஆவது சுற்றில் ரடுகானு, சக்காரி

ஸ்பெயினில் புதன்கிழமை தொடங்கிய மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் எம்மா ரடுகானு, கிரீஸின் மரியா சக்காரி ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

1 min

டெஸ்ட்: வங்கதேசத்தை வென்றது ஜிம்பாப்வே

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

1 min

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min

சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடர்ந்து ஏழாவது நாளாக நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.

1 min

ஹெச்சிஎல் நிகர லாபம் 8 சதவீதம் உயர்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 8.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

சிங்கப்பூர் தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டி

சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

1 min

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் மிருது டவல் விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி சௌத்ரி

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மிருது டவல்களின் விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி சௌத்ரி அறிவிக்கப்பட்டுள்ளார்.

1 min

காஸா பள்ளியில் தாக்குதல்: 23 பேர் உயிரிழப்பு

போரால் புலம்பெயர்ந்த அகதிகள் தங்கியிருந்த காஸா சிட்டி பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர்.

1 min

சமரசம் பேசுவோம்; சரணடைய மாட்டோம்

ரஷியாவுடன் சமரசப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தங்கள் தயாராக இருந்தாலும், அந்த நாட்டிடம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்று உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

2 mins

தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார் நிலை

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் முழு உஷார் நிலையில் ஈடுபட்டுள்ளனர்.

1 min

பிரதமர் மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை

துணை நிற்பதாக உறுதி

1 min

பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிரிழந்த உள்ளூர் முஸ்லிம் இளைஞர்

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றும் முயற்சியில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உள்ளூர் முஸ்லிம் இளைஞர் அடில் ஹுசைன் ஷா உயிரிழந்தார்.

1 min

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்கு தக்க பதிலடி

ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

1 min

Read all stories from Dinamani Villupuram

Dinamani Villupuram Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only