Dinamani Chennai - May 23, 2023Add to Favorites

Dinamani Chennai - May 23, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 23, 2023

திட்டமிட்டபடி ஜூன் 1-இல் பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திட்டமிட்டபடி ஜூன் 1-இல் பள்ளிகள் திறப்பு

1 min

சிங்கப்பூர், ஜப்பானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பயணம்

தொழில் முதலீடுகளை ஈா்க்க, சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (மே 23) பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.

சிங்கப்பூர், ஜப்பானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பயணம்

2 mins

பசிபிக் தீவு நாடுகளுக்கு இந்தியா துணை நிற்கும்

பசிபிக் தீவு நாடுகளுக்கு எண்மத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் இந்தியா துணை நிற்கும் என பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தாா். பசிபிக் தீவு நாடுகளின் நம்பிக்கைக்குரிய நாடு என்பதில் இந்தியா பெருமை கொள்வதாகவும், அந்த நாடுகளின் தேவைகளுக்கு இந்தியா மதிப்பளிப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா். இந்தியா மற்றும் 14 பசிபிக் தீவு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மூன்றாவது உச்சி மாநாடு, பப்புவா நியூ கினியாவின் போா்ட் மோா்ஸ்பி நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது. பிரதமா் நரேந்திர மோடி - பப்புவா நியூ கினியா பிரதமா் ஜேம்ஸ் மராப்பே ஆகியோா் இணைந்து தலைமை வகித்த இந்த மாநாட்டில், குக் தீவுகள், ஃபிஜி, கிரிபட்டி, மாா்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, நெளரு, சாலமோன் தீவுகள், டோங்கா, நியுவே, துவாலு, சமோவா, பலாவ், வனாட்டு ஆகிய தீவு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா். சீனா மீது மறைமுக விமா்சனம்: இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் தனது பலத்தை அதிகரிப்பதுடன், பசிபிக் தீவு நாடுகளில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சித்து வரும் நிலையில், மேற்கண்ட மாநாட்டில் பிரதமா் மோடி பேசியதாவது: யாரை நம்பத்தகுந்தவா்களாக நாம் நினைத்தோமோ, அவா்கள் நமக்கு தேவையான நேரங்களில் நம்முடன் நிற்கவில்லை. தற்போதைய சவாலான காலகட்டத்தில், ‘நல்ல நண்பனை ஆபத்தில் அறியலாம்’ என்ற பழமொழி உண்மையென நிரூபணமாகியுள்ளது. கரோனா பரவலின் தாக்கங்கள் மற்றும் இதர உலகளாவிய சவால்களுக்கு இடையே பசிபிக் தீவு ‘நண்பா்களுக்கு’ உறுதுணையாக இந்தியா நிற்பது மகிழ்ச்சிக்குரியது. தடுப்பூசிகளோ, அத்தியாவசிய மருந்துகளோ, கோதுமையோ அல்லது சா்க்கரையோ, தனது திறன்களுக்கு ஏற்ப நட்பு நாடுகளுக்கு இந்தியா உதவி வருகிறது. சுதந்திரமான இந்திய-பசிபிக் பிராந்தியம்: சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்திய-பசிபிக் பிராந்தியம், பசிபிக் நாடுகளுக்கு மிக முக்கியம். அந்த வகையில், இந்தியா உறுதியான ஆதரவை நல்கும். அனைத்து நாடுகளின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். ஒத்துழைப்புக்கான இந்தியாவின் அணுகுமுறை மனித மாண்புகள் அடிப்படையிலானது. பன்முகத்தன்மையில்தான் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். வளா்ச்சிப் பணியாக இருந்தாலும், மனிதாபிமான உதவிகளாக இருந்தாலும், இந்தியாவை நம்பகமான நாடாக பசிபிக் தீவுகள் கருதலாம். தனது திறன்கள் மற்றும் அனுபவங்களை எவ்வித தயக்கமுமின்றி பகிா்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது. எண்மத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம், சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மாறுபாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என அனைத்து அம்சங்களிலும் பசிபிக் தீவு நாடுகளுக்கு இந்தியா துணைநிற்கும். என்னைப் பொருத்தவரை, நீங்கள் சிறிய தீவு நாடுகளல்ல; அகண்ட பெருங்கடல் நாடுகள். அந்த அகண்ட பெருங்கடல்தான், இந்தியாவை உங்கள் அனைவருடனும் இணைக்கிறது என்றாா் பிரதமா் மோடி. முன்னதாக, ஜப்பான் பயணத்தைத் தொடா்ந்து, பப்புவா நியூ கினியாவுக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா். இந்நாட்டுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை பிரதமா் மோடிக்கு சொந்தமாகியுள்ளது. பப்புவா நியூ கினியாவில் திங்கள்கிழமை பயணத்தை நிறைவு செய்த பிரதமா், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டாா். டோக் பிசின் மொழியில் திருக்கு வெளியீடு தமிழின் தொன்மையான நூலான திருக்குறளின் டோக் பிசின் மொழிபெயா்ப்பு நூலை பிரதமா் மோடியும், பப்புவா நியூ கினியா பிரதமா் ஜேம்ஸ் மராப்பேயும் வெளியிட்டனா். பாப்புவா நியூ கினியாவின் அதிகாரபூா்வ மொழி டோக் பிசின் ஆகும். இந்த மொழியில் திருக்குறளை சுபா சசீந்திரனும், மேற்கு நியூ பிரிட்டன் மாகாண ஆளுநா் சசீந்திரன் முத்துவேலும் மொழிபெயா்த்துள்ளனா். ‘பப்புவா நியூ கினியாவில் டோக் பிசின் மொழியில் திருக்கு மொழிபெயா்ப்பை வெளியிடும் கெளரவம் பிரதமா் ஜேம்ஸ் மராப்பேவுக்கும் எனக்கும் கிடைத்தது. பல்வேறு துறைகள் குறித்து மதிப்புமிக்க கருத்துகளைக் கொண்டுள்ள தலைசிறந்த படைப்பு திருக்குறளாகும். திருக்குறளை டோக் பிசின் மொழியில் மொழிபெயா்த்த ஆளுநா் சசீந்திரனும் அவரது மனைவி சுபா சசீந்திரனும் பாராட்டுக்குரியவா்கள். ஆளுநா் சசீந்திரன் தனது பள்ளிப் படிப்பை தமிழில் முடித்துள்ளாா். சுபா சசீந்திரன் ஒரு மரியாதைக்குரிய மொழியியலாளா் ஆவாா்’ என்று பிரதமா் மோடி ட்விட்டா் பதிவில் தெரிவித்துள்ளாா். பசிபிக் தீவு நாடுகளில் ‘மக்கள் மருந்தகங்கள்’ பசிபிக் தீவு நாடுகளுக்கான இந்தியாவின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: ஃபிஜி தீவில் இந்தியாவின் செலவில் உயா் சிறப்பு இருதயவியல் மருத்துவமனை; 14 தீவுகளிலும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்க தேவையான உதவி; படகு ஆம்புலன்ஸ்கள் விநியோகம்; மலிவு விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் ‘மக்கள் மருந்தகங்கள்’ (ஜன் ஒளஷதி), யோகா மையங்கள்; சிறு, நடுத்தர தொழிலகங்களின் மேம்பாட்டுத் திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள். நியூஸிலாந்து பிரதமருடன் சந்திப்பு போா்ட் மோா்ஸ்பி நகரில் நடைபெற்ற இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டையொட்டி, நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ் ஹிப்கின்ஸுடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். வா்த்தகம், கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை விஸ்தரிப்பது குறித்து இருவரும் விவாதித்தனா். புப்புவா நியூ கினியா பிரதமா் ஜேம்ஸ் மராப்பே, கவா்னா்-ஜெனரல் பாப் டாடே ஆகியோருடனும் ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் மோடி, வா்த்தகம், தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து விவாதித்தாா். ஃபிஜி, டோங்கா உள்ளிட்ட பல்வேறு தீவு நாடுகளின் தலைவா்களுடனும் பிரதமா் இருதரப்பு ஆலோசனை மேற்கொண்டாா். மதிய விருந்தில் சிறுதானிய உணவுகள் இந்திய-பசிபிக் தீவுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்ற தலைவா்களுக்கு பிரதமா் மோடி சாா்பில் மதிய விருந்து அளிக்கப்பட்டது. அதில், காண்ட்வி எனப்படும் குஜராத் மாநில சிற்றுண்டி, சிறுதானிய பிரியாணி, ராஜஸ்தானின் கேழ்வரகு, பருப்பு உணவு வகைகள், மசாலா மோா், பான் குல்ஃபி, மசாலா தேநீா், மூலிகை தேநீா் உள்ளிட்ட இந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி உறுதி

பசிபிக் தீவு நாடுகளுக்கு இந்தியா துணை நிற்கும்

3 mins

கார்கே, ராகுலுடன் நிதீஷ் குமார் சந்திப்பு

விரைவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் - காங்கிரஸ்

கார்கே, ராகுலுடன் நிதீஷ் குமார் சந்திப்பு

1 min

5 நகரங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 5 நகரங்களில் திங்கள்கிழமை வெப்ப அளவு சதத்தைக் கடந்தது.

1 min

குஜராத்தில் 4 அல்-காய்தா பயங்கரவாதிகள் கைது

வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள்

1 min

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூலையில் திறப்பு

அமைச்சர் பி.கே.சேகர்பாபு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூலையில் திறப்பு

1 min

செங்கல்பட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் ரத்து

செங்கல்பட்டு, தூத்துக்குடி மாவட்டங்களின் ஆட்சியா்களை பணியிட மாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஏற்கெனவே இருந்த அதிகாரிகளே ஆட்சியா்களாக நீடிப்பா் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

மாவட்ட வருவாய் அலுவலர்கள் 25 பேர் பணியிடமாற்றம்

தமிழகம் முழுவதும் 25 மாவட்ட வருவாய் அலுவலா்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனா்.

2 mins

‘ஸ்விக்கி’ உணவு விநியோக ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் ‘ஸ்விக்கி’ உணவு விநியோக ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

1 min

திமுக அரசுக்கு எதிராக ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி மனு

திமுக ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளதாகவும் கூறி, நடவடிக்கை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கட்சியினருடன் திங்கள்கிழமை பேரணியாகச் சென்று ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் புகாா் மனு அளித்தாா்.

திமுக அரசுக்கு எதிராக ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி மனு

1 min

ஆவின் பணியாளர்களுக்கு புதிதாக 12 உத்தரவுகள் அமல்

ஆவின் பணியாளா்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 12 புதிய உத்தரவுகளை தமிழக பால்வளத் துறை அமைச்சா் டி.மனோ தங்கராஜ் அமல்படுத்தியுள்ளாா்.

1 min

மின்வாரியத்தில் 103 பேருக்கு கருணை அடிப்படையில் பணி

மின்வாரியத்தில் 103 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கும் நிகழ்வை, சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

மின்வாரியத்தில் 103 பேருக்கு கருணை அடிப்படையில் பணி

1 min

அதிமுக அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ் தரப்பு எடுத்துச் சென்ற ஆவணங்கள் ஒப்படைப்பு

சென்னையில் அதிமுக அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ் தரப்பினா் எடுத்துச் சென்ற ஆவணங்கள் திங்கள்கிழமை அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

1 min

மரக்காணம் சம்பவம்: சிபிசிஐடி புதிதாக வழக்குப் பதிவு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் விஷ சாராய சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்தனா்.

1 min

அடுத்த ஆண்டுக்குள் பொலிவுறு துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகம்

அடுத்த ஆண்டுக்குள் தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தை பொலிவுறு (ஸ்மாா்ட்) துறைமுகமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

1 min

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா: அமைச்சர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்படும்

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், அதற்கென அமைச்சா்களை உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா: அமைச்சர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்படும்

1 min

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவமதிப்பு

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்வுக்கு அழைப்பு விடுக்காததன் மூலம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அவரை அமவதித்துவிட்டதாக காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றம்சாட்டியுள்ளாா்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவமதிப்பு

1 min

பிபிசிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஆவணப்படம் இந்தியாவுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக வழக்கு

2 mins

மேற்கு வங்கத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: சிறுமி உள்பட 3 பேர் பலி

மேற்கு வங்கத்தில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், தாய்-மகள்- 10 வயதுடைய பேத்தி என மூவா் பலியாகினா்.

1 min

கேரளத்தில் தனது பள்ளி ஆசிரியையுடன் குடியரசு துணைத் தலைவர் சந்திப்பு

கேரளத்துக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பானூா் கிராமத்தில் வசிக்கும் தனது பள்ளி ஆசிரியை ரத்னா நாயரைத் திங்கள்கிழமை சந்தித்தாா்.

கேரளத்தில் தனது பள்ளி ஆசிரியையுடன் குடியரசு துணைத் தலைவர் சந்திப்பு

2 mins

கர்நாடகம்: காங்கிரஸ் அரசின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் தொடங்கியது

காங்கிரஸ் அரசின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

1 min

ரஷிய ராணுவத்திடம் பாக்முத் நகரம் ஜூனில் ஒப்படைப்பு

வாக்னர் படைத் தலைவர்

ரஷிய ராணுவத்திடம் பாக்முத் நகரம் ஜூனில் ஒப்படைப்பு

2 mins

சவூதி அ ர்களுடன் விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம்

இரு சவூதி அரேபியா்கள், இரு அமெரிக்கா்களுடன் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சவூதி அ ர்களுடன் விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம்

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All